“அதிமுக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை”- டெல்லியில் எடப்பாடி பேட்டி| edappadi palanisamy press meet in delhi

Spread the love

டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்நிலையில் இன்று (ஜன.8) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “எந்தெந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது.

பாமக எங்களுடன் வந்து இணைந்திருக்கிறார்கள். அதுபோல இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வந்து இணையும்.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா

அதிமுகவில் ஓ. பன்னீர் செல்வம் சேருவதற்கு வாய்ப்பில்லை. சசிகலாவுக்கும் இடமில்லை.

அதிமுக வலிமையாகத் தான் இருக்கிறது. அமித் ஷாவும், நானும் சேர்ந்து எங்கள் கூட்டணியை அறிவித்தப்போதே அவர் எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று தெரிவித்துவிட்டார்.

அதிமுக-வில் டிடிவி, ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கனேவே சொல்லிவிட்டேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *