அதிமுக கூட்டணியில் பாமக உத்தேச பட்டியல்: அமமுக வேட்பாளர் பட்டியல் ?  – Kumudam

Spread the love

என்டிஏ கூட்டணியில் அமமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனால் உள்துறை அமித்ஷா டெல்லிக்கு எடப்பாடி உள்பட கூட்டணி கட்சி தலைவர்களை டெல்லி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் காரணமாக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து நேற்றைய தினம் பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதே போன்று பாஜகவிற்கு 27 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், அமமுக ஒதுக்கப்பட்டுள்ள 11 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சைதாப்பேட்டை, சோளிங்கர், பூந்தமல்லி, நாங்குநேரி, ஓட்டப்பிடாரம், பெரியகுளம், மதுரை மத்தி, தஞ்சை, காரைக்குடி, திருச்சி மேற்கு, மன்னார்குடி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் சைதாப்பேட்டை செந்தமிழன், சோளிங்கரில் பார்த்திபன், பூந்தமல்லியில் ஏழுமலை, மதுரை மத்தி டேவிட் அண்ணாதுரை, காரைக்குடி தேர்போகி பாண்டி. திருச்சி மேற்கு தொட்டியம் ராஜசேகர், தஞ்சை வேலுகார்த்திகேயன், மன்னார்குடி காமராஜ் ஆகியோர் களமிறங்குவார்கள் என தெரிகிறது. 

இதே போன்று பாமக சார்பில் போட்டியிட உள்ள 18 தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலில் பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், கும்மிடிப்பூண்டி,தருமபுரி, குன்னம், அந்தியூர், விழுப்புரம், ஆற்காடு, ஓமலூர், திருவள்ளூர், சங்ககிரி, பாலக்கோடு, விக்கிரவாண்டி, திருத்தணி, செய்யாறு, செஞ்சி, ஜெயங்கொண்டம், திண்டிவனம் (அ) அரூர், மயிலம், வானூர் (அ) காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, விருத்தாசலம், மேட்டூர், சோளிங்கர், புவனகிரி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *