அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் திட்டவட்டம் ADMK

Spread the love

அப்போது அவர் பேசியதாவது:

”அதிமுக கூட்டணி ஒற்றுமையாக வலுவாக இருக்கின்றது. வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அனைத்து மக்களும் முடிவெடுத்துவிட்டனர். மக்களுடைய எழுச்சியைப் பார்க்கும்போது இந்த ஆட்சியில் அவர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. ’உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் வேடிக்கையானது, விளம்பரம் செய்யும் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த நாடகம் நடத்துகின்றனர்.

நான்கு ஆண்டுகாலம் மக்களைப் பற்றி சிந்திக்காமல், தேர்தலுக்காக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை ஊர் ஊராக கொண்டு செல்கின்றனர். அவர்களிடன் செல்போன் எண்ணை வாங்கி அதை திமுக ஐடி அணியிடம் கொடுக்கிறார்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன, பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது, அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த வெற்றி கூட்டணியாக அமையும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து துறைகளிலும் திமுக செய்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *