அதிமுக – தேமுதிக கூட்டணி அழைப்புக் குறித்தும் பேசியிருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் | “AIADMK – DMDK; An alliance just for a Rajya Sabha seat?” – DMDK’s Premalatha Vijayakanth

Spread the love

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.

அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை.

இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார்.

தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *