சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் நேற்று (பிப்.6) பொதுக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “2001-ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற வைத்த நீங்கள் 2021-ம் ஆண்டு தேர்தலில் கைவிட்டுடீங்களே? நான் என்ன தப்பு செய்தேன்.

ஊரை அடித்து உலையில் போட்டேனா? கட்ட பஞ்சாயத்து பண்ணேனா? கள்ளச்சாராயம் காய்ச்சினேனா, ரவுடி மாமூல் கேட்டேனா, இல்லை அடாவடித்தனம் பண்ணி பொறுக்கித்தனம் பண்ணி ரவுடித்தனம் பண்ணேனா? சொல்லுங்க பார்க்கலாம்.
அப்படி ஏதாவது நான் பண்ணியிருந்தால் சொல்லுங்கள் அரசியலை விட்டு நான் போய்விடுகிறேன்.