அதிமுக-பாஜக கூட்டணி: பவன் கல்யாண் வாழ்த்து

Dinamani2f2025 03 212ftabi604r2ftnieimport20191215originalpawankalyanpti.avif.avif
Spread the love

அதிமுக-பாஜக கூட்டணி கூட்டணிக்கு ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனை தலைவருமான பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், தமிழகத்துக்கு தேவையான நன்மைகளை பாஜக-அதிமுக கூட்டணி நிச்சயம் செய்யும். நிர்வாக அனுபவம் உள்ளோரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் கூட்டணியாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. முன்னதாக, கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

பேரணியில் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு! இளைஞர் பலி…வலுக்கும் மக்கள் போராட்டம்!

தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *