கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் பலியாகினர்.
கடலூர் அருகே உள்ள எம்.புதூரைச் சேர்ந்தவர் நேரு (60). இவர் அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி எம்.புதூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.
இந்த நிலையில் இவர் தனது முந்திரி தோப்பில் முந்திரி கொட்டைகள் எடுப்பதற்காக நாகியநத்தம் பகுதியைச் சேர்ந்த சரண்யா (25), கல்பனா (25) ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமாபுரம் அருகே உள்ள விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரமாக மோதியது.