அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.
இவ்விரு குழுக்களின் கூட்டமும் ஒரே அரங்கத்தில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கூட்டம் தொடங்கியதும் மறைந்த அரசியல் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, எஸ்.எம்.கிருஷ்ணா, ஈவிகேஎஸ் இளங்கோவன், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கும் அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.