‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தன் பின்னணி என்ன?’ |Edappadi Palaniswami Meets Amit Shah in Delhi: What Happened Behind the Closed-Door Talks?”

Spread the love

சேலம், கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டங்களை காரணம் காட்டி சந்திப்பை தவிர்த்துவிட்டார். எதிர்பார்த்த சந்திப்பு நிகழாததால் அப்செட்டாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா. இந்த விஷயம் எடப்பாடி தரப்புக்கு சொல்லப்பட்ட பிறகுதான், உடனடியாக விமானம் ஏறி டெல்லி பறந்திருக்கிறார் எடப்பாடி.

நேற்றிரவும் 9:30 மணிக்கு மேல் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசானி கூட்டணி குறித்து சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார். அதிமுகவுக்குள் சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோரின் எதிர்பார்ப்புகள் என்னவென்பதை எடப்பாடியிடம் அமித் ஷா கூறியதாக சொல்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்டுக் கொண்ட எடப்பாடி ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி மூவரையும் கட்சிக்குள் மட்டுமே சேர்க்கவே மாட்டேன் என உறுதியாக கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்துதான் பத்திரிகையாளர் சந்திப்பிலும், ‘எத்தனை தடவை இதையே கேட்டு, கட்சி பலவீனமா இருக்குற மாதிரியே தோற்றத்தை உருவாக்குவீங்க’ என சீறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *