தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, அன்புமணி தரப்பு பா.ம.க ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. மேலும், சில கட்சிகள் இணையும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் பணியை அ.தி.மு.க தொடங்கி முடித்தது. அதைத் தொடர்ந்து, வேட்பாளர் நேர்காணல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேர்காணல் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற நடிகையும், கட்சி நிர்வாகியுமான நடிகை கௌதமி, நேர்காணலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தேர்தல் வேட்பாளர் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறேன். அண்ணன் எடப்பாடி என்ன முடிவு எடுக்கிறாரோ அதுவே என் முடிவு. என்ன நடந்தாலும், இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றிப்பெறும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. அதற்காக நானும், என்னுடன் இருப்பவர்களும் கடுமையான உழைப்போம்.