அதிஷி தலைமையில் அமைச்சரவை முதல் கூட்டம்!

Dinamani2f2024 09 242f1ny1w0az2fatishi Cabinet Meeting Edi.jpg
Spread the love

தில்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அதிஷி தலைமையில் முதல்முறையாக இன்று (செப். 24) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

தில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அதிஷி பதிவிட்டுள்ளதாவது, தில்லி மக்களுக்கானது எங்கள் அரசு.

புதிதாக பொறுப்பேற்றுள்ள சூழலில், அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, தில்லி மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். அரவிந்த் கேஜரிவாலின் இலக்கை நிறைவேற்றுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.

கூட்டத்தில் பேசிய அவர், தில்லி மக்களின் வரியை நம்பியே அரசு உள்ளது. எனவே அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும், நேர்மையுடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதும் ஆளும் கட்சியின் பொறுப்பு.

அரசின் சேவைகள் மாநிலத்தின் கடைசி நபரையும் சென்றடைவதை உறுதி செய்வதும், அவை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடப்பதை உறுதி செய்வதும் நமது கடமை.

படிக்க | பங்குச் சந்தை உயர்வு: 90% சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல்

இதில், அரசு மற்றும் அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் அனைவரும் அரசு சேவைகளைப் பெற்று, கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்வோம் எனக் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *