கர்நாடகத்தில் பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக ஐடி ஊழியரான அதுல் சுபாஷ் (34) கடந்த டிச. 9 அன்று தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன்னர் அவரைப் பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன் மீது பொய்வழக்குப் பதிவு செய்ததையும் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தியதையும் குறித்து கடிதம் எழுதி விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதுல் சுபாஷின் பிரிந்த மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.