‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மின்சார கனவு’.

அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ மிகப்பெரிய ஹிட்.
இப்போது வரை ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து “Noise and Grains’என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ரஹ்மான், ” ஒரே பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்ததால் அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது.