இந்த நிலையில், த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,“இன்றுடன் எங்கள் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்மன் முடிந்தது. எங்களின் நிகழ்ச்சி நிரல்களையும், நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அவர்களுக்கு என்னென்ன தகவல்கள் தேவையோ அவை அனைத்தையும் கொடுத்திருக்கிறோம்.
இன்றுடன் எங்கள் தலைவருக்கு விசாரணை முடிந்தது. ஆனால் காலையிலிருந்து திமுக ஆதரவு ஊடகங்கள் விஜய் கைது என்றும், அவர் மீது சார்ஜ் ஷீட் போடப்பட்டிருக்கிறது என்றும் கிளி ஜோசியம் சொல்வதைப்போல வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை.

அமித் ஷா தமிழ்நாடு வந்தபோது, அவர் முன்னாலேயே பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், `கரூர் மரணத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம்” என வெளிப்படையாகப் பேசினார். ஆனால் அது குறித்து எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லை.
செந்தில் பாலாஜிக்கு ஏதேனும் சம்மன் அனுப்பப்பட்டதா இல்லையா என்பது குறித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் தவறான தகவல்களைப் பதிவு செய்கிறார்கள். சிபிஐ விசாரணை தொடர்பான தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.