ஆனா, அவர் கன்டென்ட் உள்ள படத்தை செய்ய விரும்பினார். பிறகு என்கிட்ட இருந்த ஒரு கதையைச் சொன்னேன். உடனடியாக இந்தப் படத்தை பண்ணலாம்னு சொல்லிட்டாரு.
அப்போதுதான் இயக்குநராக சுரேஷ் சார் வந்தாரு. அவர் வெற்றிமாறன் சார்கிட்ட இருந்து வந்தவர்னு உடனே அவரை இயக்குநராக ஓகே செய்திட்டாங்க.
நான் எழுதிய கதையை படமாக எடுத்து என்னை கண்கலங்க வச்சிட்டார் இயக்குநர் சுரேஷ். ஒரு கதையை எப்படி பிடிக்கணும்னு நான் வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன்.
‘விசாரணை’ படத்தோட டப்பிங் நடந்துட்டு இருக்கும்போது வெற்றி அண்ணன் என்கிட்ட ‘என்னடா என்னப் பண்ணப் போற? எதுவும் கதை வச்சிருக்கியா’னு கேட்டாரு.

நானும் அப்போ மாஸாக ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் சொன்னேன். அதைக் கேட்டவர் சிரிச்சிட்டு ‘உன்னுடைய பலமே போலீஸ்தான். போலீஸ் சார்ந்து இதுவரை யாரும் பேசாத ஒரு கன்டென்ட் பண்ணு’னு சொன்னாரு.
அன்னைக்கு எழுதத் தொடங்கின கதைதான் ‘டாணாக்காரன்’. இந்தப் படத்தைப் பார்த்துட்டு நான் என் மனைவிகிட்ட ‘நான் இந்தப் படத்தைப் பண்ணியிருந்தால்கூட இந்தளவுக்கு நான் செய்திருப்பேனான்னு தெரில.
நான் நிறைய லாஜிக் பார்ப்பேன். ஆனா, சுரேஷ் ரொம்ப அற்புதமாக பண்ணியிருக்காரு.’னு சொன்னேன்.” எனப் பேசினார்.