ஹெச். ராஜா இப்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். “கந்தன் மலை’ என்ற படத்தின் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் வீர முருகன் இயக்கயிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. சில சர்ச்சையான விஷயங்களையும் இந்த டிரெய்லர் உள்ளடக்கி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹெச். ராஜா, “திருப்பரங்குன்றம் விஷயம் திருத்தி கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், 2 ஆம் தேதி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி அங்கு சென்று, பலியிடுவது காலம் காலமாக அங்கு நடக்கிறது என்ற பொய் செய்தியை மக்கள் மத்தியில் பரப்பினார்.

வரலாற்று ரீதியாக பார்த்தால் 1310 ஆம் ஆண்டு தொடங்கி 8 ஆப்கானிய சுல்தான்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்தார்கள், அதில் இறுதி சுல்தான் தான் சிக்கந்தர்.