"அந்தப் படத்தில் கேப்டனுக்காக வாக்கு கேட்டேன், இன்னைக்கு அவரோட மகனுக்காக.!"- நினைவுகூர்ந்த ஸ்டாலின்

Spread the love

விருதுநகர் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்.33) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது விஜயகாந்தை நினைவு கூர்ந்த ஸ்டாலின், “கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்காக நான் வாக்கு கேட்கும்போது என் நினைவுகள் எல்லாம் எங்கே செல்கிறது தெரியுமா?

விஜய பிரபாகரன்

அவரது தந்தை, என் இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில் வேட்பாளராக நடித்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் வருவேன்.

அதில் வேட்பாளராக இருக்கக்கூடிய விஜயகாந்தை ஆதரித்து நான் பாடுவேன். அந்தப் பாட்டு கலைஞர் எழுதிய பாட்டுதான். கேப்டனுக்கு படத்தில் வாக்கு கேட்டேன் இன்று அவரது மகனுக்கு வாக்கு கேட்கிறேன். விஜய பிரபாகரனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றிருக்கிறார்.

அதே பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய ஸ்டாலின், ” பாகுபலி திரைப்படத்தில் விசுவாசத்திற்கு கட்டப்பா எப்படியோ, துரோகத்திற்கு உருவம் கொடுத்தால் அது எடப்பாடி பழனிசாமிதான்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பழனிசாமி செய்த துரோகத்தை நம்மால் எண்ண முடியாது. ஆனால், அவரின் தோல்வியை எண்ணிடலாம். பழனிசாமி சொல்லும் பொய்களை புத்தகமே போடலாம். சங்கிக் கூட்டத்தில் சேர்ந்ததால் அவர்களைப் போல வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார்” என்று விமர்சித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *