"அந்தப் போட்டியில் சிம்புவின் விக்கெட்டை நான்தான் எடுத்தேன்" – கிரிக்கெட் அனுபவம் பகிரும் ஸ்டாலின்

Spread the love

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடும் ‘ Vibe With MKS’ என்ற நிகழ்ச்சி நேற்று (டிச. 24) வெளியாகியிருந்தது.

அதில் பேசியிருந்த மு.க. ஸ்டாலின், “நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர். கலைஞர் கருணாநிதி கிரிக்கெட் விளையாட நான் பந்து வீசியிருக்கிறேன்.

கிரிக்கெட்டில் தோனியின் கேப்டன்ஷிப் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பதற்றம் இல்லாமல் கேப்டன்ஷிப் செய்வதுதான் எனக்கு அவரைப் பிடிக்கக் காரணம்.

அதே போல கபில் தேவ்வை ரொம்ப பிடிக்கும். சாதரண குடும்பத்தில் பிறந்து படிபடியாக வளர்ந்து வந்தவர்.

அது மட்டுமின்றி இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

மேலும் கவாஸ்கர், சச்சின் ஆகியோரையும் பிடிக்கும்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “சினிமா பிரபலங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவார்கள்.

ஒரு நாள் அங்கு நடந்த மேட்ச்சில் நானும் கலந்துகொண்டேன். அப்போது நான் மூன்று விக்கெட்டை எடுத்திருந்தேன்.

சிம்பு
சிம்பு

சிலம்பரசனின் விக்கெட்டை எடுத்திருந்தேன். பிறகு நெப்போலியன் போன்றோரின் விக்கெட்டை எடுத்திருந்தேன்” என்று தனது கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *