'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' – கிரிஷ் சோடங்கர் அதிரடி

Spread the love

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சீட்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

Cong
Cong

இந்நிலையில் அறிவாலயத்திலிருந்து கிளம்பிய பிறகு தனியார் விடுதியில் கூட்டணி குறித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘இது வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நாள். இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸூக்கு தொகுதி குறைந்துகொண்டேதான் வந்திருக்கிறது. இப்போதுதான் திமுக கூட்டணியில் எங்களுக்கு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்த முதல்வருக்கு நன்றி. எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். உள்ளாட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறோம். கண்டிப்பாக செய்கிறோம் என திமுக கூறியிருக்கிறது.’ என்றார்

Chodankar
Chodankar

கிரிஷ் சோடங்கர் பேசுகையில், ‘நாங்கள் தொண்டர்களின் மனநிலைக்கே முக்கியத்துவம் கொடுத்தோம். எங்களின் தொண்டர்களும் நிர்வாகிகளும் 58 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லை. அவர்களை முன்வைத்தே கூட்டணி பேசினோம். உள்ளாட்சியில் எங்கள் தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதையே பிரதானமாக முன்வைத்தோம்.

உள்ளாட்சியிலும் கூட்டுறவிலும் எங்களின் தொண்டர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என உறுதியளித்ததால் மட்டுமே கூட்டணிக்கு ஒத்துக்கொண்டோம்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *