‘அந்த தியாகி யார்?’ – சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்துவந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் | ADMK MLA’s wear badge to grab attention about Tasmac issue

1357249.jpg
Spread the love

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்த அதிமுக எம்எல்ஏ.க்கள், இவ்வாறு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

ஏற்கனவே கடந்த வாரம் திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ‘அந்த தியாகி யார்?’ என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக்கே அதிமுக எம்எல்ஏ.க்கள் பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் பல்வேறு மதுபான ஆலைகளிலும் அமலாக்கத் துறையினர் மார்ச் 6 முதல் 3 நாள்களுக்குச் சோதனை நடத்தினர். சோதனை அடிப்படையில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது.

இந்த முறைகேடுகள் 1988ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி குற்றம் என்றும், இதன் மூலம் கிடைத்த ஆதாயங்கள் 2002ஆம் ஆண்டின் கறுப்புப் பணத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்றும் அமலாக்கத் துறை சுட்டிக்காட்டியது.

சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 முதல் 30 வரை வசூல் செய்தது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது போன்ற முறைகேடுகள்; கொள்முதல் எண்ணிக்கை, பணியிட மாற்றம், பார் உரிமங்கள், அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குதல், பாட்டில் கொள்முதல், போக்குவரத்து போன்றவற்றில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறை பட்டியலிட்டது.

இந்த சோதனையை சட்​ட​விரோதம் என அறிவிக்​கக் கோரி​யும் டாஸ்​மாக் அதி​காரி​களை விசா​ரணை என்ற பெயரில் துன்​புறுத்​தக்​கூ​டாது என உத்​தர​விடக்​கோரி​யும் தமிழக அரசு மற்​றும் டாஸ்​மாக் நிறு​வனம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், என். செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இந்த சோதனை​யின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை மேல்​நட​வடிக்கை எடுக்​கக் கூடாது என இடைக்​காலத் தடை விதித்​தனர். அதன்​பிறகு இந்த வழக்கு விசா​ரணை​யில் இருந்து இரு நீதிப​தி​களும் வில​கினர்.

அதையடுத்து, இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், கே.​ராஜசேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வுக்கு மாற்​றப்​பட்​டது. கடந்​த​முறை இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள், இந்த வழக்​கில் அமலாக்​கத் துறை​யின் பதில் மனுவுக்கு தமிழக அரசு தரப்​பில் பதிலளிக்க உத்​தர​வி்ட்டு விசா​ரணையை வரும் ஏப்​.8-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர். ஏப்.8 மற்​றும் ஏப்.9 ஆகிய இரு தேதி​களில் இந்த வழக்​கில் இறு​தி​விசா​ரணை நடத்​தப்​படும் எனவும் நீதிப​தி​கள் அறி​வித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், இந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இருந்து வேறு மாநிலத்​துக்கு மாற்​றக்​கோரி தமிழக அரசு சார்​பில் மூத்த வழக்​கறிஞர் விக்​ரம் சவுத்​ரி, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சஞ்​சீவ் கண்ணா தலை​மையிலான அமர்​வில் முறை​யீடு செய்​தார். அந்த முறை​யீட்டை ஏற்ற தலைமை நீதிப​தி, இதுதொடர்​பாக மனு தாக்​கல் செய்​தால் வரும் ஏப்​.7 அன்​று வி​சா​ரிக்​கப்​படும்​ என தெரி​வித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்த அதிமுக எம்எல்ஏ.க்கள், ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.

‘யார் அந்த சார்?’ கடந்த ஜனவரி மாதம், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கோரி அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து வந்தது நினைவுகூரத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *