“அந்த தொகுதி இல்லைனா விக்கிரவாண்டி” – தேமுதிக டிமாண்டும் திமுகவின் சிக்கலும் | “If Not Those 6 Seats, Then Vikravandi” — DMDK’s Demand and the DMK’s Dilemma

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணி இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது. இருப்பினும், கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க ஆகியவற்றுடன் தொகுதிகளை இறுதி செய்வதில் இன்னும் ஒருசில இடங்களில் இழுபறி நீடிப்பதால், அண்ணா அறிவாலயம் இன்று காலை முதலே பரபரப்பாகக் காணப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில், 23 தொகுதிகள் சுமூகமாக இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஆனால், மீதமுள்ள 5 தொகுதிகளை முடிவு செய்வதில் நள்ளிரவு வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனத் தெரிய வருகிறது.

காங்கிரஸ் தரப்பில் கேட்கப்படும் “குறிப்பிட்ட அந்த 5 தொகுதி’ -களும், தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் பலமாக உள்ள அல்லது தி.மு.க நேரடியாகப் போட்டியிட விரும்பும் தொகுதிகளாக உள்ளன. இந்த முட்டுக்கட்டையை உடைக்க இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

தி.மு.க கூட்டணிக்குப்புதிதாக வந்துள்ள தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில், 8 இடங்கள் முடிவாகிவிட்டன. எஞ்சியுள்ள 2 தொகுதிகளில் தே.மு.தி.க இழுபறி நீடிக்கிறது. தே.மு.தி.க தரப்பில் பிடிவாதமாக இருக்கும் ரிஷிவந்தியம், விழுப்புரம், திருத்தணி, திருக்கோவிலூர் உள்ளிட்ட 6 தொகுதிகளை திமுக கேட்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *