ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா?
கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் காலத்தில்தான்.
வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ் பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக்கொண்டார்கள். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள்.
கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள்
பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள்.
அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை” என்று விமர்சித்திருந்தார்.