சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலியில் இன்று (3.8.2025 – ஞாயிற்றுக் கிழமை), சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக பெரும் படையை கட்டமைத்து, நம் தாய் மண்ணின் விடுதலைக்காக சமரசமற்ற போர்களை முன்னெடுத்து, அந்நியப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்