“அனஸ்வரா கிட்ட அசின் மேமுடைய வைப்ஸ் அவங்ககிட்ட இருந்தது!” – சிபி சக்ரவர்த்தி |”Anaswara had the same vibes as Asin ma’am!” – Cibi Chakravarthi

Spread the love

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “இந்த ‘வித் லவ்’ திரைப்படம் நிறைய எமோஷன்களை கேரி பண்ணுது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம் நினைச்சிருந்தா, மார்கெட் இருக்கிற நடிகர், இயக்குநர் வச்சு படம் பண்ணியிருக்கலாம்.

ஆனா, புதுமுக இயக்குநரை அறிமுகப்படுத்தியிருக்காங்க. 10 வருஷம் கழிச்சு, இது எவ்வளவு பெருசுனு எல்லோருக்கும் தெரியும்.

முதல் படம் நடிக்கும்போது, நடிகருக்கு ஒரு பதட்டம் இருக்கும். ஆனா, அபிஷன் கிட்ட அது தெரியல.

Ciby Chakravarthy - Thalaivar 173

Ciby Chakravarthy – Thalaivar 173

அவர் பெரிய ஸ்டாராக வருவார்னு தோணுது. இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் பசங்ககிட்ட இருந்து அனஸ்வராவுக்கு நிறைய ப்ரொபோசல்கள் வரும். அசின் மேமுடைய வைப்ஸ் அவங்ககிட்ட இருந்தது” என்றவர், “தலைவர் 173 அறிவிப்புக்குப் பிறகு இப்போ தான் எல்லோரையும் பார்க்குறேன்.

அறிவிப்புக்குப் பிறகு எதிர்பார்க்காத பல வாழ்த்துகள் வந்தன. ஒரு சிலருக்கு இவன் தலைவர் படம் பண்றானானு ஒரு சின்ன பதற்றம் இருக்கிறது தெரியுது. கண்டிப்பா, தலைவர் 173 பார்த்துட்டு திருப்தியோட வெளிய வருவீங்க. அது சத்தியம்!” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *