அனிருத்தின் அதிரடி இசை… வெளியானது மனசிலாயோ!

Dinamani2f2024 09 092fuywzp8iz2fscreenshot202024 09 0920170741.png
Spread the love

வேட்டையன் படத்தின் முதல் பாடலான மனசிலாயோ வெளியானது.

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலை வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் வரிகளில் உருவான இப்பாடலை அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

மேலும் சில வரிகளுக்காக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியுள்ளனர். 27 ஆண்டுகளுக்குப் பின் தொழில்நுட்ப உதவியோடு ரஜினி படத்தில் பாடியுள்ளார் மலேசியா வாசுதேவன்.

மேலும், இப்பாடலைக் கேட்கும் ரசிகர்கள் இந்தாண்டின் வைரல் பாடல்களில் ஒன்றாக இது இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *