சிரஞ்சீவியின் “மன ஷங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது.
நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் வெங்கடேஷும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியிருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ‘சங்கராந்திக்கு வஸ்துன்னம்’ திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்திருந்தது.

படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து பேட்டியளித்திருக்கிறார்கள்.
அந்தப் பேட்டியில் விவாகரத்துப் பெறும் மனநிலையில் இருந்தவர்கள், இப்படத்தைப் பார்த்தப் பிறகு சேர்ந்து வாழத் தொடங்கியிருப்பதாக சிரஞ்சீவி அந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.