அனுமதி மறுக்க ஆளுநருக்கு தார்மீக உரிமை இல்லை: ஆயுள் கைதியின் முன்விடுதலை மனுவை அரசு மீண்டும் பரிசீலிக்க கோர்ட் உத்தரவு | Court orders government to reconsider plea of ​​prisoner

1327401.jpg
Spread the love

சென்னை: ஆயுள் கைதியை முன்கூட் டியே விடுதலை செய்ய ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், அவரது மனுவைஅரசு மீண்டும் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஆளுநருக்கு எந்ததார்மீக உரிமையும் இல்லை.அமைச்சரவையின் முடிவுக ளுக்கு அவர் கட்டுப்பட்டவர் என்றும் நீதிபதிகள் தெரிவித் துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த வீரபாரதி என்பவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில்இவர் தாக்கல் செய்த மனு வில் கூறியிருந்ததாவது: ஜாமீன் கோரி மனு: நான் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை அடிப் படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சிறைத்துறை டிஜிபி தலைமை யிலான மாநில குழுவிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. என்னுடன் இதே குற்றத்துக்காக கைதான சக ஆயுள் தண்டனை கைதி முன்கூட்டியே விடுதலை செய்யப் பட்ட நிலையில், என்னை மட்டும் இதுவரை விடுதலை செய்யவில்லை.

ஆளுநர் நிராகரிப்பு: இதுதொடர்பான கோப்புகளுக்கு முதல்வர் தலைமை யிலான அமைச்சரவை அனுமதி அளித்து, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், கொடுங்குற்றச்செயல் என்று கூறி,ஆளுநர் அதற்கு ஒப்புதல்அளிக்காமல் நிராகரித்துவிட்டார். எனவே, என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இந்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக் கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, டி.மரியஜான்சன் ஆகியோர் ஆஜராகி, பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டனர்.

தார்மீக உரிமை இல்லை: இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘அமைச்சரவை எடுக்கும் முடிவு களுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான். அதை ஆளுநரால் மீறமுடியாது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை எதுவும் இல்லை. எனவே, மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுவை அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்’’ என்றுஉத்தரவிட்டனர். அதுவரை மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *