அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்: பிரேமலதா

Dinamani2f2025 03 022f442xms0u2fpremalatha.jpg
Spread the love

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும என்று கட்சியின் பொதுச்செயல் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் விஜயகாந்தின் முழு உருவ சிலையை தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது மற்ற மொழிகளை கற்கும் போது தான் இந்த மாநிலத்திலிருந்து வெளியே செல்லும்போது வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பல்வேறு வகைகளில் வருங்காலம் சிறக்கும். எனவே அவர் அவர்களுக்கு பிடித்த மொழிகளை படிப்பதில் எந்த தவறும் இல்லை.

தேமுதிகவை பொறுத்தவரையில் தாய் மொழியை காத்து அதேபோல் அனைத்து மொழியையும் காக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான எங்களுக்கும் ஒரு வார காலத்திற்கு முன்பே அழைப்பு வந்துவிட்டது.

அதனால் உறுதியாக தேமுதிக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும். தமிழக முழுவதும் பல்வேறு விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இருக்கிறது.

ஜார்க்கண்ட்: ஒரே மாதத்தில் யானையின் 3ஆவது உடல் கண்டெடுப்பு

அதற்கு மிக முக்கிய காரணம் டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதைவஸ்துகள் அதிகரிப்பு, வேலை இல்லாத நிலைமை, பாலியல் வன்கொடுமை என எல்லா பக்கமும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது.

நிச்சயம் இது தடுக்கப்பட வேண்டும். ஏப்ரல் மாதம் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு 234 தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்களை அறிவித்து, எங்கள் கட்சி வளர்ச்சி பணிகளை நாங்கள் தொடங்க இருக்கிறோம்.

அதற்கு பிறகு கூட்டணியில் எத்தனை இடங்கள் என முடிவாகும்போது, எந்த தொகுதி கொடுக்கப்படுகிறதோ, அங்கு யாரை வேட்பாளராக்குவது என்பதை அப்போது நாங்கள் அறிவிப்போம். 2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *