அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து | TN Governor, political party leaders extend Diwali greetings

1380344
Spread the love

சென்னை: கோலாகல​மாக கொண்​டாடப்​படும் தீபாவளி திரு​நாளில், அனை​வரது வாழ்​விலும் துன்​பங்​கள் நீங்கி இன்​பங்​கள் பெரு​கட்​டும் என ஆளுநர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்​து தெரி​வித்​துள்​ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிக்கிறது. அன்னை லட்சுமி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, அன்பு மற்றும் இணக்கமான சமூகத்தைவளர்க்க அருள்புரியட்டும்.

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: தீபாவளி திரு​நாளில் அனை​வரும் நல்ல உடல் நலத்​தோடு வாழ​வும், எல்​லோரது இல்​லத்​தி​லும் இன்​ப​மும் மகிழ்ச்​சி​யும் பெரு​கட்​டும். தமிழக மக்​களின் துயரங்​களுக்கு தீர்வு ஏற்பட அடுத்த ஆண்டு நடை​பெறும் தேர்​தலுக்​குப் பின், நல்​லாட்சி மலர பிரார்த்​திப்​போம்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தீபாவளி திரு​நாளில் நாடெங்​கும் அன்​பும், அமை​தி​யும் தழைக்​கட்​டும். துன்​பங்​கள் கரைந்து ஒளிமய​மான எதிர்​காலம் பிறக்​கட்​டும். அனை​வரது வாழ்​விலும் வளமும், நலமும் பெரு​கட்​டும்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர்செல்​வப்​பெருந்​தகை: தீமையை வதம் செய்த தீபாவளித் திரு​நாளில் வகுப்​பு​வாத சக்​தி​கள் வீழ்த்தப்பட வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கும் வகை​யில் தீபாவளி திரு​நாளை கொண்​டாடு​வோம்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: வாழ்​கை​யின் இருளை நீக்கி ஒளியை அளிக்​கும் தீபாவளியை கோலாகல​மாக கொண்டாடும் அனை​வருக்​கும் மனமார்ந்த தீபாவளித் திரு​நாள் நல்​வாழ்த்​துக்​கள்.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: இல்​லாமை எனும் இருள் வில​கி, இன்ப ஒளி பிர​காசித்​து, இல்​லங்​களி​லும், உள்​ளங்​களி​லும் அன்​பும், ஆனந்​த​மும் செழிக்​கட்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: இருளை விலக்​கி, ஒளி கொடுக்க வரும் தீபாவளி திரு​நாளை கொண்​டாடும் அனை​வருக்​கும் வாழ்த்​துகள்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: தமிழக மக்​களுக்கு சுமை​கள், தீமை​கள் நீங்​கி, நன்​மை​கள் நிறைந்​து, இன்​பங்​கள் மிகுந்​து, வாழ்வு சிறக்​கும் வகை​யில் தீபாவளி திரு​நாள் அமையட்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தீமை​களை அழித்​து, நன்​மை​களை பெருக்​கும் தீபாவளி திரு​நாள், மக்​கள் அனை​வருக்​கும் நல்​லதொரு எதிர்​காலத்தை கொடுக்​கும் நாளாக அமைய தீபாவளி வாழ்த்​துக்​களை உரித்​தாக்​கு​கிறேன்.

பாஜக தேசிய மகளிரணி தலை​வர் வானதி சீனி​வாசன்: அறி​யாமை, அச்​சம் போன்ற இருளை நீக்​கி, அறி​வும், தெளி​வும் பெற்று அமை​தி, மகிழ்ச்​சி​யுடன் அனை​வரும் வாழ தீபாவளி வாழ்த்​துகள்.

மேலும் இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசிய தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன்: தீபாவளி திரு​விழாவை மனித நேயத்தை வளர்க்​கும் மனவெளிச்​சத்தை தரும் விழா​வாக ஆசிப்​போம். எல்​லோரை​யும் நேசிப்​போம்.

இதேபோல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை, ஐஜேகே தலை​வர் ரவிபச்​சமுத்​து, விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் எம்.பி.க்கள். சரத்​கு​மார், சு.​திரு​நாவுக்கரசர், பெருந்தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​. தன​பாலன், கொங்​கு​நாடு மக்​கள் தேசிய கட்சி பொதுச்​செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், கோகுல மக்​கள் கட்சி தலை​வர் எம்​.​வி.சேகர், மஜக தலை​வர் தமி​முன் அன்​சா​ரி, கிறிஸ்தவ மதச்​சார்​ பற்ற கட்​சி​ தலை​வர் மார்​டின் உள்​ளிட்​டோரும் வாழ்த்​து தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *