அனைவரும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள்: பிரதமர் மோடி!

Dinamani2f2024 09 092fwp4pqwih2fpti09 06 2024 000114b201.jpg
Spread the love

அனைவரும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல்

ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் இன்று(செப்.18) தோ்தல் நடைபெற்று வருகிறது.16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன.

மொத்தம் 219 வேட்பாளா்களில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்களாகவும், இதில், 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இத்தோ்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனா்.

மொத்த வாக்காளர்களில் 1.23 லட்சம் போ் 18-19 வயதுடைய இளம் வாக்காளா்களாக உள்ளனர். தோ்தலுக்காக 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ஜம்மு – காஷ்மீர் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

பிரதமர் மோடி எக்ஸ் தளப் பதிவு

இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக இளம் மற்றும் புதிய வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பிரபல ரௌடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *