அன்புமணிக்கு எதிரான ராமதாஸ் வழக்கு தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – Kumudam

Spread the love

இந்த வழக்கில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தன்னை ஒரு தரப்பாக இணைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். “ராமதாஸ் தன்னைத் தன்னிச்சையாகத் தலைவர் என அறிவித்துக் கொண்டு கட்சிப் பெயரில் வழக்குத் தொடர்ந்துள்ளார். கட்சியின் நிர்வாக முடிவுகளில் பொதுச்செயலாளரான எனக்கும் பங்குண்டு, எனவே என்னை இந்த வழக்கில் இணைக்க வேண்டும்” என்று அவர் வாதிட்டார்.

வடிவேல் ராவணனின் கோரிக்கையை முன்வைத்து வாதங்கள் நடைபெற்ற போது, நீதிபதி ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்தார். “தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகள் நாளை சரியாகலாம். ஆனால், கட்சியின் பெயரை வைத்துத் தொடரப்பட்டுள்ள வழக்கில், சட்ட விதிகளின்படி தான் முடிவெடுக்க முடியும்” என்று தெரிவித்தார். மேலும், “கட்சியின் பொதுச்செயலாளரான வடிவேல் ராவணனை இந்த வழக்கில் இணைப்பதில் என்ன சிக்கல் உள்ளது?” என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ராமதாஸின் வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம், ஆவணங்களை எதிர்மனுதாரர் வழங்கக் கோரி அன்புமணி தாக்கல் செய்த மனுவையும் நாளை (மார்ச் 17) விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *