படம் நடிச்சு, பிறகு இந்தப் படத்தை ப்ரிவ்யூல பார்த்தேன். மிகவும் திருப்தியா இருந்துச்சு” என்றவர், “‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தோட டைரக்டர்தான் இந்தப் படத்தோட ஹீரோனு சொன்னாங்க.
அவர் ஒரு ஆக்டிங் கோச்னும் சொன்னாங்க. இந்தக் கதையை நான் கேட்கும்போதுதான், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைச்சிட்டு இருந்தது.
அவர் அவரோட கேர்ள் ஃப்ரெண்ட்க்கு ப்ரொபோஸ் பண்ண ஒரு வீடியோ கூட ரொம்ப க்யூட்டா இருந்ததுன்னு ரசிச்சு பார்த்தேன்” என மெல்ல சிரித்தவர், “இந்தப் படத்துல அபிஷன் ஜீவிந்த் கூட நடிச்சது எனக்கு ஒரு நல்ல அனுபவமா இருந்தது.

தொடக்கத்துல வொர்க்ஷாப் நடந்த அப்போலாம் அபிஷனுக்கு என் கூட வைப் செட் ஆகல.
ஷூட் தொடங்குனதுக்குப் பிறகுதான் அந்த வைப் நல்லா செட் ஆக ஆரம்பிச்சிடுச்சு” என்றவர், ” மகேஷ் அண்ணா, செளந்தர்யா மேம், அபிஷன்-க்கு என்னோட நாலு படத்த பாக்கணும்னு ரெக்கமெண்ட் பண்ணனும்னா சூப்பர் சரண்யா, தண்ணீர் மத்தன் தினங்கள், நேரு, ரேகாசித்ரம் போன்ற படங்களைச் சொல்வேன். என் அப்பா பெரிய ரஜினி சார் ரசிகர்.
ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாக்கே வந்தேன்” என்றார் உற்சாகத்துடன்.