டிபிஎஸ் என்பது ஒரு முற்றிலும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தொடர்ச்சியான சிகிச்சைப் பயணம் என்பதை வலியுறுத்தி பேசிய அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேனின் மூத்த நரம்பியல் ஆலோசகர் மற்றும் உடல் இயக்கக் கோளாறு சிறப்பு மருத்துவர் டாக்டர். விஜய்சங்கர் பரமானந்தம் [Dr. Vijayashankar Paramanandam, Senior Consultant Neurologist & Movement Disorders Specialist, Apollo Hospitals Greams Lane, Chennai] கூறுகையில், “டிபிஎஸ் அறுவை சிகிச்சையில் குறுக்குவழிகள் என்று எதுவும் இல்லை. இந்த மருத்துவ முடிவெடுக்கும் செயல்முறை அறுவை சிகிச்சைக்கு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். மருத்துவ ரீதியிலான கணிப்பை, தொழில்நுட்பத்துடன் இணைப்பதே எங்கள் நோக்கம்.
டிபிஎஸ் என்பது ஒரு அறுவை சிகிச்சையை விட மேலானது; இது ஒருவர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைப் பயணம். இதன் வெற்றி, துல்லியமாக உள்வைப்பு சாதனத்தை பொருத்துவதில் (implantation) மட்டும் இல்லை, ஒவ்வொரு நோயாளியின் அறிகுறிகளின் சுயவிவரத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட, நிபுணத்துவம் வாய்ந்த, தனிப்பயனாக்கப்பட்ட நிரலாக்கத்தையும் (programming) சார்ந்துள்ளது. இதுவே தூண்டுதலை அர்த்தமுள்ள மற்றும் நிலையான முன்னேற்றமாக மாற்றுகிறது.
மருத்துவ பயனாளர்களுக்கு மீண்டும் அவர்களின் உடல் இயக்கத்தையும், நம்பிக்கையையும், இறுதியாக அவர்களின் வாழ்க்கையையும் மீட்டுக் கொடுப்பதே எங்கள் நோக்கம்,” என்று கூறினார்.
டிபிஎஸ் அறுவை சிகிச்சைக்குத் தேவையான கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய தரங்களைக் குறிப்பிடும் விதமாக, அப்போலோ சில்ட்ரன் ஹாஸ்பிட்டல்ஸின் மூத்த கண்காணிப்பு செயல்பாட்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். அரவிந்த் சுகுமாரன் [Dr. Arvind Sukumaran, Senior Consultant Functional Neurosurgeon, Apollo Children’s Hospitals, Chennai] பேசுகையில், ‘’ “டிபிஎஸ் முறையை சரியான பகுதியில் மேற்கொள்வது என்பது குறிப்பிட்ட இலக்கான நியூக்ளியஸை தாக்குவது என்று அர்த்தமல்ல.
இது ஒவ்வொரு நோயாளியின் செயல்பாட்டு உடற்கூறியல், ஒவ்வொருவருக்கும் அவர்களது மருத்துவ பலன்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதாகும். அதேநேரம், நுட்பம் அல்லது பாதுகாப்பின் எந்தவொரு அம்சத்திலும் சமரசம் செய்யாமல் இருப்பதையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அதிக அளவில் டிபிஎஸ்