அமமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு | AMMK District Executives Consultative Meeting: Invitation to Executive

Spread the love

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 15-ம் தேதி தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாயம் தொகுதி, செப்டம்பர் 18-ம் தேதி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி, செப்டம்பர் 20-ம் தேதி செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், தாம்பரம் தொகுதி, செப்டம்பர் 25-ம் தேதி திருவள்ளூர் மத்திய மாவட்டம், அம்பத்தூர் தொகுதி என 4 மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *