அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி!

Dinamani2f2024 072fff33f3be 4a33 43f2 A628 2087be92503f2fscreenshot202024 07 1720164847.jpg
Spread the love

நடிகர் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம், கடந்த தீபாவளியையொட்டி, திரையரங்குகளில் வெளியானது.

அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. உலக அளவில் சுமார் 900க்கு மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது.

முதல் நாளில் இந்த திரைப்படம் 42.3 கோடியை வசூலித்திருந்தது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை பெற்றத் திரைப்படமாக அமரன் மாறியது.

தொடர்ந்து ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலக அளவில் 300 கோடிக்கு மேல் அமரன் படம் வசூலித்தது. இதற்கிடையில் அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அமரன் படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் உரிமையை ரூ.60 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *