வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் 5 நாள்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
2024-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. அமர்நாத் யாத்திரை இந்தாண்டு முந்தைய ஆண்டுகளை விட சிறப்பான முறையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து நாள்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் 5,696 பேர் கொண்ட மற்றொரு குழு இன்று காலை காஷ்மீருக்குப் புறப்பட்டது.