அமித்ஷாவைச் சந்தித்த தினகரன்: திமுக மீது கடும் விமர்சனம்|‘Pancha Pandava alliance’ vs DMK: Dhinakaran’s big claim

Spread the love

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது அங்கங்கே பயணம், பிரசாரம் என அரசியல் களப் பரபரப்பிற்குச் சொல்லவே வேண்டாம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருக்கிறார்.

இரண்டு நாள்களுக்கு முன்னால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்திருந்தார்.

என்.டி.ஏ கூட்டணியின் அடுத்தடுத்த டெல்லி பயணங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமித்ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் டிடிவி தினகரன்.

அப்போது அவர் பேசியதாவது…

“நாங்கள் எல்லாம் டெல்லி வந்தாலே முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார். “தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியைப் பெற்று தரமாட்டார்களா?’ என்று எங்களைக் கேட்கிறார்.

சரியான புரிதல் இல்லாமல் டெல்லியோடு நீங்கள் குழாய் அடி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸிற்குப் பிறகு நாங்கள் எப்படி நிதியைப் பெற்று தரமுடியும்? இது தேர்தல் காலம்.

அதனால், திமுகவை எப்படி விழ்த்துவது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *