தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்…
ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன்.
அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்த அவசரம்.