அமித் ஷா மீது புகாரளித்த திரிணமூல்!

Dinamani2f2024 10 292fvnfv626x2famit Sha Jammu Kashmir Campaign Edi.jpg
Spread the love

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

அரசுமுறைப் பயணமாக வருவதை தனிப்பட்ட முறையிலான பிரசாரமாக மாற்றுவதாகவும், அரசு இயந்திரங்களை தங்கள் கட்சியின் பிசாரத்துக்குப் பயன்படுத்துவதாகவும் திரிணமூல் குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு 24 பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட ஹரோவா மற்றும் நைஹாதி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. பர்கானா மாவட்டத்தில் பெட்ராபோல் பகுதியில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமித் ஷா அரசியல் சாயம் பூசியுள்ளார்.

அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கும் தேர்தல் பணிகளுக்கும் இடையே வேறுபாட்டை கடைபிடிக்கிறேன் எனக்கூறும் மத்திய உள்துறை அமைச்சரின் நோக்கங்கள் மீது கடுமையான சந்தேகங்கள் எழுகிறது. மேலும், அரசு இயந்திரங்களை தங்கள் கட்சியின் தனிப்பட்ட பிசாரத்துக்குப் பயன்படுத்துகிறார் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சல்மான் கானை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தவர் கைது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *