அமெரிக்காவின் ஏரியில் விழுந்த இந்தியர் இறந்து விட்டதாக அமெரிக்க காவல்துறை அறிவித்தது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 26 வயதான சித்தாந்த் வித்தல் படேல், அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிய சென்றிருந்தார். அவர், கடந்த வாரம் (ஜூலை 06) அமெரிக்காவின் தேசியப் பூங்காவில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, அருகிலிருந்த ஏரியில் தவறி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தோர் சித்தாந்த்தை காப்பாற்ற முயன்றும், அவர்களால் முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து, சித்தாந்த்தின் குடும்பத்தினருக்கு இந்த சம்பவம் குறித்து, தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது குடும்பத்தினரும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் அமெரிக்காவைத் தொடர்புகொண்டு, சித்தாந்த்தை மீட்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சித்தாந்த்தின் உடலையும் தேடியும் கிடைக்காததால், அவர் இறந்திருக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் சித்தாந்த்தின் நண்பர்கள் கூறுவதாவது, அவரது உடல் நீருக்கு அடியில் சிக்கியிருக்கலாம். தொடர்ந்து தேட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.