அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

Dinamani2f2025 03 272far8t7xdo2fnewindianexpress2025 02 05rlvrt40oap25036220649485.avif.avif
Spread the love

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு ஃப்ளோரிடா நகரத்தின் பெம்ப்ரோக் பார்க் பகுதியில் நேற்று (மார்ச் 26) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் தற்போது வரை தெரிவிக்கப்படாத நிலையில் படுகாயமடைந்த ஒரு சிறுமி மற்றும் ஒரு ஆண் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெம்ப்ரோக் பார்க் காவல் துறையின் செய்தி தொடர்பாளர் இவான் ராஸ் கூறுகையில், இந்த தாக்குதல் உள்ளூர் நபர்களினால் நடத்தப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: காஸாவில் ஹமாஸை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *