இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சியாளர்களை விமர்சித்து டிரம்ப் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த தீவிர இடதுசாரி பைத்தியகாரர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி. நீங்கள் பரிதாபமாக தோல்வி அடைந்துவிட்டீர்கள். எப்போதும் தோல்வி மட்டுமே அடைவீர்கள்.
அவர்களின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் மிகவும் மோசமாக இருந்ததால், அமெரிக்காவை மீண்டும் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல மாபெரும் வெற்றியை தங்களுக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.
கவலைப்பட வேண்டாம், நம் நாடு விரைவில் மதிக்கப்படும். நியாயமாகவும் வலுவானதாகவும் மாறும். நீங்கள் அமெரிக்கர்களாக இருப்பதில் முன்பைவிட பெருமைப்படுவீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.