அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அந்நாட்டின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன்தான் அவர் இந்த தேர்தல் களத்தில் இறங்கினார்.
பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் அரிசோனா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
ஏற்கனவே, 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக இருந்தபோதும், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையை கடுமையாகப் பின்பற்றி பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் களமிறங்கி வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
இவரது வெற்றி அமெரிக்கர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்தாலும், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர் மற்றும் அமெரிக்காவில் தலைமையிடமாகக் கொண்டு வெளிநாடுகளில் இயங்கி வரும் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாக இருக்காது என்றே கூறப்படுகிறது.