அமெரிக்கா-ஈரான் பேச்சு முன்னேற்றம்: ட்ரம்ப் தாக்குதல் தள்ளிவைப்பு|Peace Hopes Rise: Trump Pauses Iran Attack Plan

Spread the love

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“எப்போது இந்தப் போர் முடியும்?’ என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“கடந்த இரண்டு நாள்களாக, அமெரிக்கா, ஈரானுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை நன்றாகவும், சுமுகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கில் நடந்துவரும் பிரச்னைகளை முழுவதும் முடிப்பதற்கானது ஆகும்.

ஈரான் போர்

ஈரான் போர்

கடந்த ஒரு வாரம் நடந்த முழுவதுமான, விளக்கமான உரையாடலுக்குப் பின், அமெரிக்காவின் போர்த் துறையிடம் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான எந்தவொரு ராணுவ தாக்குதலையும் அடுத்த ஐந்து நாள்களுக்குத் தள்ளிவைக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன். இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும்” என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்றால், விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரலாம்.

ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் பதிவு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *