> ஹார்முஸ் ஜலசந்தி தங்களிடம் இருக்க வேண்டும் என்றும், அந்தப் பாதையைக் கடக்க ஈரானுக்கு கப்பல்கள் சுங்க வரி கட்ட வேண்டும் என்றும் ஈரான் கூறியிருக்கிறது. ஆனால், அமெரிக்கா இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
> அமெரிக்கா முடக்கி வைத்திருக்கும் ஈரான் சொத்துகளை உடனடியாக விடுவிக்கப்படும் என்று பேசப்பட்டிருக்கிறது. இதற்கு அமெரிக்கா ஒத்துக்கொள்ளவில்லை.
> லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கும் அமெரிக்கா ஒத்துக்கொள்ளவில்லை.
ஆக, பரஸ்பர எந்தக் கோரிக்கைக்கும் இரு நாடுகளும் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான், பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.