அமெரிக்கா: தாறுமாறு விலைவாசி; தோல்வியை தந்த மக்கள்! உஷாரான ட்ரம்ப் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? |After Electoral Setback, Trump Removes Taxes on Tomatoes and Beef

Spread the love

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்திருக்கிறார்.

இதனால், அதிக வரி செலுத்தி இறக்குமதி ஆகும் பொருள்கள் அமெரிக்க சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த வரிகள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் யுக்தி என்று ட்ரம்ப் கூறுகிறார்.

நியூயார்க்

நியூயார்க்

ஆனால், ஏற்கெனவே குறைவான வேலைவாய்ப்பு, பணவீக்கம் போன்றவற்றால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிக விலை என்பது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

எலெக்ட்ரானிக் பொருள்கள், ஆடம்பர பொருள்களுக்கு மட்டுமல்ல, மளிகை பொருள்கள் கூட அதிக விலைக்கு தான் விற்கப்படுகின்றன.

சமீபத்தில் விர்ஜினியா, நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன விலை உயர்விற்கு பதிலடியாக, இந்தத் தேர்தல்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு மக்கள் தோல்வியையே பரிசளித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *