அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணங்களில் ஒன்றான நியூ மெக்சிகோவுக்குட்பட்ட லாஸ் குரூசெஸ் பகுதியிலுள்ள பூங்காவில் இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் 19 வயது இளைஞர்கள் இருவரும், 16 வயது சிறுவன் ஒருவரும் பலியானதாக நியூ மெக்சிகோ காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 16 முதல் 36 வயதுடைய 14 பேர் படுகாயம் அடைந்து நகரில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பூங்காவில் இருந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டின்போது எடுத்த விடியோ பதிவுகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் காவல் துறை சுட்டிக்காட்டியது.