“இரண்டு நாள்களாக ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்கா அடுத்த 5 நாள்களுக்கு ஈரானைத் தாக்காது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
ஆனால், நாங்கள் அமெரிக்கா உடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் மறுக்கிறது.

அமெரிக்கா பேசிக்கொண்டிருக்கும் அந்த நபர் யார்?
இந்தச் சமயத்தில்தான், நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப், “‘நாங்கள் மிகவும் மதிக்கக்கூடிய தலைவராகிய ஒருவரிடம் பேசி வருகிறோம்” என்று ஈரான் பேச்சுவார்த்தை குறித்து கூறியிருந்தார்.
அந்த நபர் ஈரானின் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் என்று அமெரிக்காவில் இருந்து வெளியான தகவல்கள் கூறுகின்றன.