அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? – ட்ரம்ப் புலம்பல் பதிவு

Spread the love

உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரிகள் ‘சட்டத்திற்குப் புறம்பானது’ என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு கடந்த வாரம் வந்ததில் இருந்து உள்ளுக்குள்ளும், வெளியேயும் புகைந்துகொண்டு தான் இருக்கிறார் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப்.

இந்த நிலையில், தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை சாடி தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை ட்ரம்ப் பதிவிட்டிருக்கிறார்…

ட்ரம்ப்
ட்ரம்ப்

“பல ஆண்டுகளாக அமெரிக்காவை சுரண்டிக் கொண்டிருக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் செல்லலாம்.

இந்தத் தீர்ப்பு சுரண்டலை இன்னும் அதிகரிக்கக் கூட செய்யும்.

பல ஆண்டுகளாக, நம்மை சுரண்டி பல பில்லியன் டாலர்கள் பெற்ற நாடுகள் இந்தத் தீர்ப்பால் மீண்டும் அதிக பணத்தைப் பெறப் போகின்றனர். இது நியாயமானது அல்ல.

இந்த வழக்கின் மறு விசாரணை அல்லது மறு தீர்ப்பு சாத்தியமா???” என்கிற கேள்வியோடு பதிவை முடித்திருக்கிறார்.

https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *