அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரத்தில் சிறப்புப் பூஜை | Kamala Harris’ ancestral village in India to pray for her election victory

1335694.jpg
Spread the love

துளசேந்திரபுரம்: அமெரிக் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாக வேண்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாக வேண்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. வாஷிங்டன்னில் இருந்து 13 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் குக்கிராமத்தில் கமலா ஹாரிஸுக்காக நடைபெறும் பூஜைகள் ஊடக கவனம் பெற்றுள்ளன.

இது குறித்து கோயிலுக்கு அருகே உள்ள சிறிய கடையின் உரிமையாளரும், அக்கிராமவாசியுமான மணிகண்டன் கூறுகையில், “கமலா ஹாரிஸுக்காக செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் நிச்சயமாக பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இருக்கும்” என்றார்.

‘கமலாவின் திருவாரூர் பின்புலம்’ – கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

ஜாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறினார். பின்னர் அமெரிக்காவில் பி வி கோபாலன் குடும்பம் குடியேறியது.இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

கமலா ஹாரிஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸ் கடந்த 2019 ம் ஆண்டு “Truth Be Hold’ என்ற புத்தகத்தில் தனது தாத்தா P.V. கோபாலன் தனக்கு ஊக்க சக்தியாக இருந்ததாகவும், கடந்த 1991 ஆம் ஆண்டு, தனது தாத்தாவுக்கு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்து கொண்டது இன்றளவும் தனது நினைவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *